பிரபல நடிகர் சித்தார்த் 20 வருடத்திற்கு முன்பு எப்படி இருந்துள்ளார் பாருங்க….? பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ

நடிகர் சித்தார்த் நடிப்பில் சைத்தான் கி பச்சா, டக்கர் ஆகிய படங்கள் முடிந்து தற்போது வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. அவர் சர்வானந்துடன் இணைந்து நடித்துள்ள மகாசமுத்திரம் படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.இந்நிலையில் சினிமாவில் நடிக்க விரும்புகிறவர்களுக்கு ஓர் வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறார் நடிகர் சித்தார்த். தற்போது புதிய படம் ஒன்றில் நடிகர் சித்தார்த் ஒப்பந்தமாகியுள்ளார். சித்தார்த்தின் 35 வது படமாக தயாராகும் இப்படத்தில் நடிக்க ஆண், பெண் மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் தேவைப்படுகிறார்கள்.

நடிகர் சித்தார்த் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக விளங்குபவர், இவர் நடிப்பில் பல பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சித்தார்த் தொடர்ந்து மணிரத்னம், கார்த்திக் சுப்ராஜ் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றியிருந்தார்.

மேலும் தமிழில் அறிமுகமான உடனே தெலுங்கு திரையுலகம் பக்கம் திரும்பிய சித்தார்த் அங்கும் பல பிளாக் பஸ்டர் படங்களில் நடித்திருந்தார். கடைசியாக இவர் நடிப்பில் அருவம் திரைப்படம் வெளியானது அதன்பின் நவரச, டக்கர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் 20 வருடத்திற்கு முன் தனது தோழியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

மேலும் “அப்போது தான் இது போல் தொப்பி அணிவதை வழக்கமாக வைத்திருந்ததாகவும், என் நண்பர்கள் என்னை Sidy என்று அழைப்பார்கள்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *