தலையில் தண்ணீர் பாட்டிலை வைத்துக் கொண்டு சைக்கிள் ஓட்டி மாஸ் காட்டிய பெண்மணி.. இணையத்தில் தீயாகப் பரவும் வீடியோ..!

இப்போதெல்லாம் யாருக்கு என்ன திறமை இருக்கிறது என்பதே கணிக்கவே முடியாத விசயமாக இருக்கிறது. அந்தவகையில் இங்கே ஒரு இளம்பெண்ணின் திறமை வேற லெவலில் வைரல் ஆகிவருகிறது.அப்படி, அந்த இளம்பெண் என்ன செய்தார் எனக் கேட்கிறீர்களா? நெருக்கடி மிகுந்த மாநகர சாலைக்குள் சைக்கிள் ஓட்டுகிறார். அதில் என்ன விசேசம் என்கிறீர்களா? அதில் தான் ஆச்சர்யமே உள்ளது. அவர் தன் தலைக்கு மேல் ஒரு தண்ணீர் பாட்டிலை வைத்துக்கொண்டு அது கீழேயே விழாமல் லாவகமாக சைக்கிள் ஓட்டுகிறார். அதிலும் அவ்வப்போது தன் இரு கைகளையும் விட்டுக்கொண்டு சைக்கிள் ஓட்டுகிறார்.

எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் மிக சாமர்த்தியமாக தலைக்கு மேல் தண்ணீர் பாட்டிலை வைத்துக்கொண்டு பைக்,

காரையெல்லாம் முந்தி, ஓவர்டேக் செய்து சைக்கிள் ஓட்டுகிறார் அந்த இளம்பெண். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன். அசந்துபோவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *