சினிமாவில் நடிக்கப்போகும் அருண் விஜய்யின் மகன்- அவரே புகைப்படத்துடன் வெளியிட்ட சூப்பர் தகவல்

1995ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் தான் அருண் விஜய். தொடர்ந்து பல அடிகள் சினிமாவில் வங்கிய போது அருண் விஜய் தனது விடா முயற்சியை கைவிட்டதில்லை. பிரியம், கங்கா கௌரி, இயற்க்கை, பாண்டவர் பூமி என்று பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியபோதும், அவரால் திரையுலகில் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை.ஆனாலும் தனது தொடர் முயற்சியால் இன்று அருண் விஜய் மிகப் பெரிய நடிகராக, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றுள்ளார்.

2015ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் திரையுலகில் அருண் விஜய்க்கு தங்க கதவு திறந்தது. குற்றம் 23, தடம், செக்கச்சிவந்த வானம், சகோ என்று அதிரடியாய் தொடர் வெற்றிகள். அருண் விஜய்யின் தந்தை விஜயக்குமார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரின் காதல் திருமணம், பிள்ளைகள் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதோ இந்த தொகுப்பின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க.

சினிமாவில் வாரிசுகள் களமிறங்குவது வழக்கமான விஷயம் தான். இதற்காக பாலிவுட்டில் பெரிய சண்டையே நடந்து வருகிறது, தமிழ் சினிமாவில் அப்படி ஒரு பிரச்சனை இல்லை.விஜயகுமார் அவர்களின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நாயகனாக நடித்து வந்தவர் அருண் விஜய், இவர் பல தடைகளை தாண்டி இப்போது ஒரு நல்ல இடத்தை பிடித்துள்ளார்.

தற்போது அருண் விஜய்யின் மகன் சினிமாவில் அறிமுகமாக உள்ளாராம். அந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கவுள்ளதாம். அடுத்தடுத்த தலைமுறை சினிமாவில் நுழைவது சந்தோஷமாக இருப்பதாக அருண்விஜய் டுவிட் செய்துள்ளார். இதோ தனது மகனுடன் அவரே போட்ட டுவிட்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *