மனைவி பிள்ளைகளுடன் வாழவேண்டும் தனியாக இருந்து கதறி கொள்ளும் நடிகர் பார்த்திபன்

நிவர் புயல் மற்றும் சென்னை மழை குறித்து நடிகர் பார்த்திபன் டுவிட்டரில், ”ஊசி வெடி சத்தத்தின் அளவில் இடி சத்தம் கேட்டாலும், சித்தம் கலங்கி, அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு காரிலேயே ஓடிப் போவேன். அடுத்த இடியில் இந்த லோகம் அழிந்து விட்டால் மனைவி மக்களுடனே மடிந்து விட வேண்டும்.சாவிலும் பிரிந்திருக்கக் கூடாது என்ற அறிவு + அர்த்தங்கெட்ட வேகமது. காலை நாலு மணிக்கு எழுந்து வாசலில் வந்து அமர்ந்தேன். நாலா பக்கமும் இடி சத்தம். ஒவ்வொருவரும், வெவ்வேறு நாலா திசையில் எந்த பதட்டமும் இல்லை.

என் மகள் கீர்த்தனாவுடன் குறுஞ்செய்தி பகிர்வு. காத்திருந்த கன்று ஒன்று கயிற்றிலிருந்து விடுபட்டு, தாயின் வயிற்றில் முட்டுவது போல என் விரல்கள் தட்ட, அடுத்த முனையில் மகள் கீர்த்தனா. ஒரு நாயும், மூன்று பூனைகளும் இடி சத்தத்தில் பயந்து ஒளிந்துக் கொள்வதாக வருந்தினார்.(அன்றைய என் நிலையில் இன்று இன்னெருவர்) மரக்கிளைகளில் படும் மழைத்துளிகளின் சப்த பின்னணியில் மனம்+ரணம் இல்லா மரணம் வரை பேசினோம்.

அந்நேரம் முதியவர் குளிர் நடுங்க பால் போட வந்தார். பேச்சை நிறுத்தி “டீ குடிச்சிட்டுப் போங்க” என்றேன். குனிந்து பாக்கட்டை வைக்காமல் (கூன் இருந்ததால்) நின்ற நிலையிலேயே வைத்தார். ”முடியாத வயசுலேயும் சம்பாதிக்க வேண்டியிருக்கு” ஏன் ஐயா! பசங்க யாருமில்லையா?”-அவர் “நான் கல்யாணமே பண்ணிக்கலயே” என்றார்.நிவர் வருகிறதாம்! வர்தாவை விட வேகத்தில் வருதாம். முன் ஜாக்கிரதை நிவாரன பணிகள் அறிவிக்கப்பட்ட இடங்களிலும் செய்தல் அவசியம். அவசியமின்றி வெளி செல்ல வேண்டாம். கடந்தே தீரும் எதுவும்/இதுவும்!” என பதிவிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *