ஜெயம் பட காமெடி நடிகரின் மகள் இவங்கதான? இவருக்கு இவ்ளோ பெரிய மகளா என ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!! –

தமிழ் திரையிலகில் காமெடி நடிகருக்கு பஞ்சமே கிடையாது. அந்த வகையில் ஐவரும் ஒரு முன்னணி நகைச்சுவை நடிகர்தான். 2003 ஆம் ஆண்டு ஜெயம் ராஜா இயக்கிய ஜெயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இப்படத்தில் இயக்குனர் ஜெயம் ராஜாவின் தம்பி ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் சதா கோபிநாத்,ராஜீவ், பிரகதி, நிழல்கள் ரவி, செந்தில், மயில்சாமி,இளவரசு, நளினி போன்ற பலர் ந்மடித்திருன்தனர்.

இப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்ப்பை பெற்றதோடு சூப்பர் ஹிட் ஆனது. இப்படத்தில் முக்கிய நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்தவர் சுமன் ஷெட்டி. அவர் இப்படத்தில் அலி பாபா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அதுவே அவருடைய முதல் படமாகும். அதன்பின்னர் அவர் அதை தொடர்ந்து குத்து,7G ரெய்ன்போ காலனி, கேடி மண்ணின் மைந்தன், சண்டக்கோழி, பிப்ரவரி 14 , வரலாறு தோரணை, படிக்காதவன், போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடைசியாக 2019 ஆம் ஆண்டு சூர்யநிதி இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த விளம்பரம் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் முக்கிய வேடங்களில் ஹைரா , தம்பி ராமையா சோனா, புவனா, ரித்தீஷ் போன்ற பலர் நடித்திருந்தார்கள். இவர் தமிழ் மட்டுமன்றி தெலுங்கு மொழியிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது நடிகர் சுமன் ஷெட்டி யின் மகன் மகள் இருக்கும் புகைப்படம் ஓன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் நடிகர் சுமன் ஷெட்டிக்கு இவ்வளவு பெரிய மகனும் மகளும் இருக்கிறார்களா என ஆச்சர்யத்தில் உள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *