பிக்பாஸ் வீட்டிற்குள் 50-வது நாளில் நுழையும் வைல்ட் கார்ட் எண்ட்ரி.. அடங்கிபோவர்களா போட்டியாளர்கள்

Cinema

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஆறு வாரங்களை தொட்டு விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறியுள்ளார்கள்.வைல்ட் கார்ட் எண்ட்ரியாக, அர்ச்சனா, சுசித்ரா நுழைந்தனர். இந்த நிலையில் பிக்பாஸ் ஆட்டத்தில் இன்றளவும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு முந்தைய சீசன்களை விட குறைவுதான் என சொல்லாம்.

இந்த நேரத்தில் அதாவது 50-ஆவது நாளில் பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய போட்டியாளராக முஹம்மத் அசீம் நுழைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அசீம் நுழைவார் எனவும் அவர் தனிமப்படுத்தப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகிருந்தது.

தற்போது, இவர் நுழைந்தால் பாலாவுக்கும், இவருக்கும் பிரச்சினை கூட ஏற்படலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.ஏனென்றால் பாலா மற்றும் ஷிவானி இடையே காதல் ரொமான்ஸ் ஓடுகிறது. ஷிவானி ஏற்கனவே சீரியலில் இரட்டை ரோஜாவில் அசீம் உடன் நடித்திருந்தபோது கிசுகிசுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *