ஆசை காதலி நயன்தாராவின் பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த பரிசு

Cinema

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பிறந்தநாளுக்கு அவரது காதலரான விக்னேஷ் சிவன் சூப்பரான பரிசு கொடுத்துள்ளார்.நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் தற்போது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

ர வு டி பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் முதல்படம் தான் ”நெற்றிக் கண்”.
நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை மிலிந்த் ராவ் என்பவர் இயக்குகிறார், நடிகர் அஜ்மல் வில்லனாக அசத்த கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இன்று நயன்தாராவின் பிறந்தநாள் என்பதால், பிறந்தநாள் பரிசாக நெற்றிக்கண் டீசரை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.கண்பார்வையற்ற பெண்ணாக, ஒரு குட்டி கதை சொல்வது போன்று அமைந்துள்ள டீசர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *