நடிகர் பிரபுதேவாவுக்கு ரகசிய திருமணம் நடந்து முடிந்தது பொண்ணு யார் தெரியுமா!!

Cinema

இந்திய திரையுலகின் முன்னணி நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முக திறமை கொண்ட பிரபுதேவா ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.தமிழ் திரையுலகில் வெற்றி நடைப்போட்டு வந்த பிரபுதேவா தற்போது பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.தற்போது சல்மான்கான் நடித்து வரும் ராதே படத்தை இயக்கிவரும் நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் என கூறப்பட்டது.

இத்தகவல் உண்மையானது என தற்போது தெரியவந்துள்ளது, பிரபுதேவாவுக்கு கடும் முதுகுவலி இருந்த போது பிசியோதெரபிஸ்ட் மருத்துவரை சந்தித்துள்ளார்.அடிக்கடி மருத்துவரை சந்திக்க நேர்ந்ததால், அவருக்கும், பெண் மருத்துவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இதற்கு பெண் வீட்டாரும் சம்மதம் தெரிவிக்க, மிக ரகசியமாக சென்னையில் வைத்து திருமணம் நடந்து முடிந்ததாம்.

பெண்ணின் பெயர், எந்த ஊரைச் சேர்ந்தவர் உள்ளிட்ட விவரம் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
இந்தத் திருமணத்தில் மிக நெருங்கிய நட்பு வட்டாரத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.பிரபுதேவாவுடன் பணிபுரிந்து வரும் யாருக்குமே, இந்தத் திருமணத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையாம். திரையுலகினர் பலரும் பிரபுதேவாவுக்குத் தனிப்பட்ட முறையில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருவதாக தெரிகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *