புற்று நோயினால் அவதிப்பட்டு வந்த நடிகர் தவசிக்கு சிவகார்த்திகேயன் உதவி செய்துள்ளார். எத்தன லச்சம் கொடுத்தார் தெரியுமா!!

Cinema

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.இப்படம் இப்போதும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது, மேலும் இப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் தவசி.இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல், ரஜினிமுருகன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர் புற்றுநோய்யால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார், இதனால் முற்றிலும் மெலிந்து ஆள் அடையாளம் தெரியாத அளவு மாறியுள்ளார். மேலும் சிகிச்சைக்காகவும் உதவியை நாடியுள்ளார் நடிகர் தவசி. மனதை உறையவைக்கும் அவரின் புகைப்படம் இதோ.

இதை தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்து அவருக்கு மருத்துவ மற்றும் பொருளாதார உதவிகள் அளிப்பதாக பலர் முன்வந்துள்ளனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவரது தரப்பில் இருந்து ரூபாய் 25 ஆயிரம் பண உதவியை, நடிகர் தவசிக்கு வழங்கியுள்ளார். தனது ரசிகர் மன்ற நிர்வாகியின் மூலம், அவர் இந்த உதவியை நேரடியாக நடிகர் தவசிக்கும் வழங்கியுள்ளார். இதையடுத்து சிவகார்த்திகேயனின் உதவிக்கு ட்விட்டரில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *