தந்தை- மகன் மோதல்? அதிரடியான கட்டுப்பாடுகளை விதித்த நடிகர் விஜய்

Cinema

இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிய அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது, இதனை விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் பதிவு செய்ததாகவும், தனக்கும் அதற்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை என அதிரடியாக அறிக்கை வெளியிட்டார் விஜய். மேலும், தனது ரசிகர்கள் யாரும் அதில் இணைய வேண்டாம் என உத்தரவிட்டார்.

அத்துடன் தனது பெயரையோ, புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், தனது விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்த பழைய நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை விஜய் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிதாக மாவட்டத் தலைவர்கள், இளைஞர் அணி தலைவர்களை சென்னை, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இயக்கத்தின் பெயர், புகைப்படம், கொடி உள்ளிட்ட அனைத்திற்கும் அனுமதி பெற வேண்டும் என்றும் இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *