தன் தங்கையின் கல்விக்காக டீ விற்கும் 14 வயது சிறுவன்.. மனதை உ லு க் கு ம் ச ம் ப வ ம்… வைரலாகும் புகைப்படம்..!

Cinema

ஆண்கள் இல்லாத வீடுகளின் வ லி மிகத் துயரமானது. அந்த வரிசையில் வீட்டில் ஆண் துணை இல்லாத நிலையில், தன் அம்மாவும் கரோனாவால் வேலை இழந்த நிலையில் ஒரு சிறுவன் டீ விற்று தன் சகோதிரிகளை படிக்க வைக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். கரோனா காலம் பலரது வாழ்வையும் நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கிறது. லட்சக்கணக்காணோர் வேலை இழந்துள்ளனர். பலரும் ஊதிய வெட்டுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இந்த சூழலில் சுபன் என்ற 14 வயது சிறுவனின் அம்மாவும் வேலை இழந்தார். 12 ஆண்டுகளுக்கு முன்பே அவனது தந்தையும் இறந்துவிட, அவனுக்குப் பின்பு பிறந்த இரு தங்கைகளின் கல்விக்காக தேனீர் விற்கிறான் சிறுவன் சுபன்.

கணவரின் இறப்புக்குப்பின்பு சுபனின் அம்மா ஒரு பள்ளிப்பேருந்தில் உதவியாளராக இருந்தார். கரோனா நேரத்தில் பள்ளிகளில் வகுப்புகள் ஆன்லைன் மூலம் மட்டுமே இயங்குவதால் அந்த வேலையையும் இழந்தார் சுபனின் அம்மா. இதனால் இந்த சிறுவன் டெல்லியின் முக்கிய வீதிகளில் போய் டீ விற்கிறான்.

இதுகுறித்து சோகத்தோடு பேசிய சுபன், ‘நான் பெண்டி பஜாரில் ஒரு கடையில் இந்த டீயை தயாரிக்கிறேன். நிரந்தர கடை கிடையாது, அலைந்து விற்பேன். ஒரு நாளைக்கு 300 ரூபாய் முதல் 400 ரூ வரை வருமானம் கிடைக்கிறது. அதை இப்போது தங்கைகளின் கல்விக்காகவும், குடும்ப செலவுக்காகவும் அம்மாவிடம் கொடுக்கிறேன். நிலமை சரியானதும் நானும் படிப்பேன்.’’என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *