ரியோவால் நள்ளிரவில் ஸ்ருதிக்கு வரும் மோசமான மெசேஜ்! கடும் அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!

Cinema

ரியோவை பற்றி தெரியாத சிலர் ஸ்ருதிக்கு மோசமான மெசேஜ் மற்றும் சில தொந்தரவுகளை இரவில் கொடுத்து வருவதாக அவரின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.அதனாலேயே அவர் ரியோவை பிக்பாஸிற்கு அனுப்பியிருக்க கூடாது என்றும் வருந்தியுள்ளார்கள். ரியோ பிக் பாஸில் கலந்து கொண்ட பின்னர் ஆரம்பத்தில் நல்ல ஆதரவு இருந்தது.ஆனால், சமீபகாலமாக இவரது பெயர் டேமேஜ் ஆகி வருகிறது. சமீபத்தில் கூட ரியோ மனைவி சுருதி இது குறித்து பதிவு ஒன்றை போட்டிருந்தார்.

அதில், ஒருவேளை நான் உன்னை பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பி இருக்க கூடாது இது நமக்கானது அல்ல. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடத்திலும் உனக்காக நான் இருப்பேன் என்று குறிப்பிட்டிருந்தார்.இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரியோவின் நெருங்கிய நண்பர் பிரிட்டோ , என்னை பொறுத்த வரை ரியோ நன்றாக தான் விளையாடுகிறார்.

அவர் கோ பப்படும் இடத்தில் கோ பப்படுகின்றார். சில சமயம் அவரது நண்பர்களும், குடும்பத்தினரும் கொஞ்சம் வருத்தப்படுகிறோம்.அவனுக்கு நிறைய கோபம் வரும் அது அவனுடன் பழகிய நண்பர்களுக்கும் குடும்பத்தாருக்கு நன்றாக தெரியும். ரியோவை பற்றி தெரியாத சிலர் ஸ்ருதிக்கு மோசமான மெசேஜ் மற்றும் சில தொந்தரவுகளை இரவில் கொடுத்து வருகிறார்கள். அதனாலேயே அவர் ரியோவை பிக்பாஸிற்கு அனுப்பியிருக்க கூடாது என வருந்தியுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *