இப்படியொரு மனைவி கிடைத்தால் உங்க வாழ்க்கையும் சொர்க்கம் தான்.. ஒவ்வொரு மனைவியும் பார்க்க வேண்டிய பதிவு..!

Cinema

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். அதே உங்கள் வாழ்க்கையில் இப்படி ஒருமனைவி கிடைத்தால் வாழும்போதே சொர்க்கம் என்றே சொல்லிவிடலாம். இதுகுறித்து தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். ஒரு கணவனும், மனைவியும் வெளியில் சென்று கொண்டு இருந்தார்கள். சாலையில் ஒரு கவரிங் கடையைப் பார்த்ததும் மனைவி ஆசைப்பட்டு ஒரு நெக்லஸ் வாங்கிக் கேட்டார்.

உடனே கணவர் எதுக்கு இப்போ கவரிங்? அடுத்த மாசம் உனக்கு ஒரிஜினல் தங்கத்திலேயே வாங்கித் தருகிறேன் என சொல்கிறார். உடனே மனைவி தங்கத்தில் போட்டால் எனக்கு அரிக்கும் என சொல்லி கவரிங்கை வாங்கினார். அவர்கள் கிளம்பும் போது கடைக்காரர் ஏங்க எல்லாரும் கவரிங் அரிக்கும்ன்னு சொல்லுவாங்க. ஆனா உங்க மனைவி மட்டும் தங்கம் அரிக்கும்ன்னு சொல்லி கவரிங் வாங்கிட்டுப் போறங்களே என ஆச்சர்யமாகக் கேட்டார்.

உடனே கணவர் கரோணாவில் எனக்கு வேலை போயிடுச்சு. அவ நகையையெல்லாம் வித்துட்டோம். அதில் தான் இப்போ செலவு பண்றோம். நான் அதனால் தான் அவளுக்கு தங்கத்தில் ஏதாவது வாங்கிக் கொடுக்கணும்ன்னு நினைக்கிறேன். ஆனால் என்னோட சூழல் தெரிஞ்சதால அவ கவரிங்கில் வாங்கிட்டு போயிட்டா என சொன்னார் கணவர்.இதைக் கேட்ட கடைக்காரர் உங்களை மாதிரி கணவர்…மனைவி புரிதலோடு இருந்துட்டா டைவர்ஸ் நாட்டுல இல்லாம ஆகிடும் என பாராட்டுகிறார். இப்போ சொல்லுங்க…இப்படியொரு மனைவி கிடைக்க கொடுத்துதானே வைத்திருக்க வேண்டும்? இதோ நீங்களே இந்த விடியோவைப் பாருங்கள்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *