நான் நயன்தாராவை மட்டும் காதலிக்கவில்லை.. காதல் முறிவு குறித்து பேசிய நடிகர் சிம்பு..!!

Cinema

திரைப்படத்தில் ஒன்றாக இணைந்து நடிக்கும் பொழுது நடிகர், நடிகைக்குள் காதல் ஏற்படுவது, அதன்பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிடுவது ஒன்று புதிதல்ல.இதை போல் பல காதல் ஜோடிகளின் பிரிவை தமிழ் சினிமா மட்டுமல்ல திரையுலகமே கண்டுள்ளது. அதில் தமிழ் திரையுலகில் சர்ச்சைக்குள் சிக்கிய காதல் ஜோடிகள், நடிகர் சிம்பு மற்றும் நடிகை நயன்தாரா.இவர்கள் இருவரும் வல்லவன் திரைப்படத்தில் இருந்தே காதலிக்க துவங்கினார்கள். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

இந்நிலையில் நயன்தாராவுடன் தனக்கு ஏற்பட்ட காதல் முறிவை குறித்து சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் சிம்பு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.இருவரும் காதலித்தோம், ஆனால் எதோ ஒரு சூழ்நிலை காரணமாக பிரிந்து விட்டோம். அதன்பின் நாங்கள் இருவருமே நல்ல நண்பர்களாக இருந்து வருகிறோம்.

நான் நயன்தாராவை மட்டும் காதலிக்கவில்லை, அதற்கு முன் பல பேரை காதலித்து இருக்கிறேன் ” என கூறியுள்ளார்.நயன்தாராவுடன் காதல் முறிவிற்கு பிறகு இருவரும் இணைந்து பாண்டிராஜ் இயக்கத்தில் ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஜோடிகளாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *