கொரோனாவால் திருத்தப்பட்ட சம்பள பட்டியல் : கோடியில் புரளும் நயன்தாரா? எத்தனை கோடினு தெரியணுமா?

Cinema

கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்ட பிறகு நடிகர்கள், நடிகைகளின் சம்பளத்தை குறைக்குமாறு தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்தார்கள். சில நடிகர்கள், நடிகைகள் தாமாகவே முன்வந்து சம்பளத்தை குறைத்தார்கள்.பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்புகள் மீண்டும் துவங்கி நடந்து வருகின்றன. இந்நிலையில் தமிழ் திரையுலகின் நடிகைகளுக்கான சம்பள பட்டியலை தயாரிப்பாளர்கள் தயாரித்துள்ளார்களாம். அந்த பட்டியலில் நயன்தாரா தான் முதலிடத்தில் இருக்கிறார்.

நயன்தாராவுக்கு ரூ. 4 கோடி சம்பளம். அவர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதால் ரூ. 4 கோடி கொடுக்க தயாரிப்பாளர்கள் தயங்குவது இல்லை.சம்பள விஷயத்தில் நயன்தாராவுக்கு அடுத்த இடத்தில் காஜல் அகர்வால் இருக்கிறார். அவருக்கு ரூ. 2 கோடி சம்பளம். த்ரிஷா, தமன்னா ஆகியோர் ரூ. 1.50 கோடியுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்கள்.

ரூ. 1 கோடி சம்பளத்துடன் ஸ்ருதி ஹாசன் நான்காவது இடத்தில் இருக்கிறார்.கீர்த்தி சுரேஷுக்கு ரூ. 80 லட்சமும், அஞ்சலிக்கு ரூ. 70 லட்சமும், நிவேதா பெத்துராஜ், ஐஸ்வர்யா ராஜோஷுக்கு ரூ. 40 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மஞ்சிமா மோகனுக்கு ரூ. 35 லட்சமும், அனுபமா பரமேஸ்வரனுக்கு ரூ. 25 லட்சமும், ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு ரூ. 10 லட்சமும் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *