திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டின் போது பெற்றோர் கண் முன்னே ஜோடிக்கு நடந்த விபரீதம்!!

இந்தியாவில் திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டின் போது மணமகன், மணமகள் இருவரும் காவிரி ஆற்றில் மூழ்கி இ றந்த சம்பவம் து யரத்தை ஏற்படுத்தியுள்ளது.Tirumakudalu Narsipura உள்ள Kyatamaranahalli-வை சேர்ந்தவர்கள் சந்துரு(28), சசிகலா(20). இருவருக்கும் எதிர்வரும் நவம்பர் 22ம் திகதி அன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சந்துரு-சசிகலா ஜோடி திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டிற்காக Tirumakudalu-விலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள காவிரி ஆறு தொடங்கும் Talakaadu பகுதிக்கு குடும்பத்தினர் மற்றும் போட்டோகிராஃபருடன் சென்றுள்ளனர்.

ஆற்றில் பரிசலில் சென்ற ஜோடிகள் உட்கார்ந்த படி பிரபலமான டைடானிக் போஸில் புகைப்படம் எடுக்க முயன்றுள்ளனர். சமீபத்தில் பொழிந்த மழையால் ஆற்றில் வெள்ளம் சீறிப்பாய்ந்ததால், பரிசல் ஓட்டியால் பரிசலை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது.இதனால் பரிசல் கவிழ குடும்பத்தனிர் கண் முன்னே சந்துரு-சசிகலா இருவரும் ஆற்றில் மூழ்கியுள்ளனர் என பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

எனினும், பரிசல் ஓட்டி மட்டும் சாமர்த்தியமாக நீந்தி உயிர் தப்பியுள்ளார். தம்பதியினரின் உடல்களை மீட்க்க பொலிசார் மீனவர்கள் மற்றும் தீயணைப்புத் துறை ஊழியர்களின் உதவியை நாடியுள்ளனர். சம்பவம் குறித்து Talakaadu பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *