ஷிவானியின் ரீல் ஜோடி நடிகர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்கிறாரா?.. தீ யாய் பரவும் இன்ஸ்டா பதிவு..!!

Cinema

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன், விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தினமும் நடக்கும் சண்டை சச்சரவுகள் மூலம் பலரது முகத்திரை கிழிக்கப்பட்டு வருகிறது.மேலும் விறுவிறுப்பை கூட்ட அடுத்தடுத்து வைர்ல்டு கார்டு போட்டியாளர்கள் இறக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் அடுத்ததும் ஒரு பிரபல டிவி பிரபலம் தான் நுழைய இருப்பதாக தகவல்கள் வைரலாகிறது.

ஆம் ஷிவானியின் ரீல் ஜோடி நடிகர் அசீம் நுழைய உள்ளார் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் ‘பகல் நிலவு’ சீரியலில் ஒன்றாக நடித்தார்கள்.அதன்பிறகு கடைக்குட்டி சிங்கம் என்று சீரியலிலும் ஒன்றாக நடிக்கையில் சில எபிசோட்களுக்குப் பிறகு அந்த சீரியல் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு ஷிவானி வேறு ஒரு சேனலுக்கு மாறிவிட்டார்.

இந்நிலையில் அசீம் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தால், எப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழ போகிறது என்பதை காண அனைவரும் ஆவலாக இருக்கின்றனர்.இந்நிலையில் அசீம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு இட்டுள்ளார். அதில் “100 சிங்கங்களை 1 நாய் வழிநடத்தினால் சிறுபடை வந்தாலும் அச்சிங்கங்கள் அனைத்தும் நாயாகிவிடும், இதே 100 நாய்களை 1 சிங்கம் வழிநடத்தினால் பெரும்படையே வந்தாலும் அந்நாய்கள் அனைத்தும் சிங்கங்களாய் உருவெடுக்கும்” என்று கூறியுள்ளார்.இதை பார்த்த பலரும் இது பிக்பாஸ் நிகழ்ச்சி செல்வதற்கு முன்பு நீங்கள் கொடுக்கும் குறிப்பா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *