நான் வெளியே போறதுக்கு காரணம் இருக்கு! உண்மையை உடைத்த சுரேஷ்? மறைமுகமாக சொன்ன கமல்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்

Cinema

மிகவும் வலுவான போட்டியாளர் சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறி இருக்கிறார்.
வாக்கெடுப்பின் அடிப்படையில் அர்ச்சனா அல்லது சோம் வீட்டைவிட்டு வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போல சுரேஷின் வெளியேற்றம் அமைந்து விட்டது. மறுபுறம் இதை எதிர்பார்த்து காத்திருந்தவர் போல சுரேஷின் நடவடிக்கைகள் இருந்தன. வேகமாக உள்ளே சென்று தன்னுடைய பொருட்களை எடுத்து வைக்க ஆரம்பித்தார்.

இது நியாயமில்லை என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் தன்னை வெளியே அனுப்புமாறு சுரேஷ் தான் முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. நிகழ்ச்சியின் முடிவில் கமலும் இதை மறைமுகமாக உறுதிப்படுத்தி இருந்தார். வீட்டுக்கு உள்ளே சுரேஷும் இதுகுறித்து பேசியிருக்கிறார். பொருட்களை எடுத்து வைக்க அவர் சென்றபோது அவர் பின்னாடி சனம், கேப்ரியலா இருவரும் சென்றனர்.

 

அப்போது இதுக்கு ஒரு காரணம் இருக்கு. விரைவில் அது உங்களுக்கு தெரிய வரும் என்பது போல அவரது பேச்சு இருந்தது.இதனால் சுரேஷே தன்னை அனுப்புமாறு கோரிக்கை வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. இறுதிப்போட்டி வரை முன்னேறுவார் என ரசிகர்கள் அவர்மீது நம்பிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெளியேற்றம் அ தி ர் ச்சி என்றாலும் கமல் கூறியதன் பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன என்று ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *