அடேங்கப்பா..!! இணையத்தில் வை ரலா கும் சீதனம்..! வாய்பிளக்கும் நெட்டிசன்கள்..!!

Cinema

அனைவரின் வாழ்விலும் திருமணம் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு. ஏனெனில் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே திருமணம்தான். திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது. இந்தியாவில் திருமணங்களை மிகவும் ஆடம்பரமாக நடத்தும் வழக்கம் இருந்து வருகிறது. பொதுவாகவே திருமண வைபத்தின் போது பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்கு சீதனம் வழங்குவது வழக்கம்.அவரவர் தங்களது தகுதிக்கேற்ப சீர்வரிசையை வழங்குவார்கள்.

அதில் கார் முதல் பைக் வரை, வெள்ளி முதல்வீட்டுக்கு தேவையான பாத்திரங்கள் வரை இடம்பெற்றிருக்கும். முக்கியமாக, சீர்வரிசையை தங்கள் கௌரவமாக பார்ப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். சில ஊர்களில் திருமண மண்டபத்தில் சீர்வரிசையை அலங்கார பொருள் போல அடுக்கி வைத்திருப்பார்கள்.

அப்படித்தான் மதுரையில் நடந்த திருமணத்தில் சீர்வரிசை அடுக்கி வைக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.அந்த படத்தை பார்த்த அனைவரும் ஒரு நிமிஷம் நிச்சயம் ஆடிப்போயிருப்பார்கள், சுமார் 10 வீட்டுக்கு தேவையான பாத்திரங்களை சீர்வரிசையாக கொடுத்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *