நயன்தாராவின் முதல் காதல் பிரிவுக்கு இதுதான் காரணமா? பல ஆண்டுகள் கழித்து வெளியான உண்மை

Cinema

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து ஐய்யா படத்தில் நடிகையாக அறிமுகமான முதல் பிரபலமானவர் நடிகை நயன்தாரா. இதையடுத்து சந்திரமுகி படம் ஹிட் கொடுத்ததால் முன்னணி நடிகையாகவும் தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரை பெற்று முன்னணி மற்றும் பிஸி மார்க்கெட் நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா.தற்போது ஊரடங்கால் அவரது காதலர் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து நாட்களை கழித்து வருகிறார். எங்கு சென்றாலும் ஜோடியாக ஃபிளைட்டில் ஊர்சுற்றி வருகிறார்கள்.

விக்னேஷ் சிவனுக்கு முன்பே நடன இயக்குநரும் நடிகருமான பிரபுதேவாவை காதலித்து திருமணம் வரை சென்றார். சில ஆண்டுகள் ஜோடிகையாக சுற்றி கையில் டேட்டூ குத்துமளவிற்கு காதலில் மும்முரமாக இருந்தார்.
மூன்று ஆண்டுகளே நீடித்த காதல் சில முரன்பாடான காரணங்களால் பிரிந்தனர். ஒரே வீட்டில் மூன்று ஆண்டுகளாக இருந்தும் ஏன் பிரிந்தனர் என்று பலர் கேள்வி கேட்டு வந்தனர்.

இதற்கு என்ன தான் காரணம் என்று புரியாத புதிருமாக இருந்த நிலையில், நடிகை நயன்தாரா தனது காதல் முறிவு குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளது தற்போது வைரலாகியுள்ளது. அவர் கூறியதாவது, ”நம்பிக்கை இல்லாத காதல் நிலைக்காது. அதேபோல் நம்பிக்கை இல்லாத இடத்தில் சேர்ந்து வாழ்வதை விட தனியாக வாழ்வதே மேல் என உணர்ந்து, பழைய காதல்களை கடந்துவிட்டேன்” என கூறியுள்ளார்.

இப்படி கூறியது பிரபுதேவா, ஒரு குழந்தைகளை இருவரும் வளர்க்கவேண்டும் என்றும் அதற்கு நயன் தாரா ஒப்புக்கொள்ளவில்லையாம். மேலும் சிம்புவின் காதல் பற்றி பிரபுதேவா நயனிடம் திருமணத்திற்கு முன்பே கேள்வி கேட்க ஆரம்பித்ததுதானாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *