ரெட் கார்டு கொடுத்து பாலா வெளியேற்றப்படுகிறாரா? காரணம் இதுதானா?.. அ தி ர்ச்சியில் பார்வையாளர்கள்

Cinema

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள பாலாஜி தொடர்ந்து போட்டியாளர்கள் ஒவ்வொருவுடனான பிரச்சனையில் சிக்கி வருகிறார்.போட்டி அனைத்திலும் அவர் செய்வது தான் சரி என்றும், யாரவது அதைப்பற்றி கேட்டால் அதற்கு ஆமா அப்படி தான் பண்ணுவேன் என திமிறாக பேசுவதையுமே வழக்கமாக செயல்பட்டு வருகிறார்.இதனால், போட்டியாளர்கள் பலரும் கோபப்பட்டாலும் இவர் என்ன செய்தாலும் சரி என்பதை போல, சம்யுக்தா, கேபி, ஷிவானி இவர்கள் எல்லாம் ஜால்றா தட்டிக்கொண்டே இருக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த நாட்களில் நடந்த எபிசோட்டில் சனம் ஷெட்டியுடன் இவருக்கு மோதல் ஏற்பட்டிருந்தது.
அப்போது, அவரை தகாத வார்த்தையில் திட்டினார். மேலும் சனமை, பாலாஜி அட்ஜஸ்ட்மெண்ட் செய்து தான் அழகி பட்டத்தை வென்றதாக கூறியிருந்தார்.இதனால், அவன் எப்படி என்னைப் பார்த்து அப்படி சொல்லலாம்? என குறை தீர்க்கும் டாஸ்க்காக எழுதப்பட்ட கட்டுரையில் எழுதியிருந்தார் சனம்.இந்த காட்சி ப்ரோமோ வீடியோவில் இடம் பெற்றிருந்தது. ஆனால் விஜய் டிவி சர்ச்சைகள் எழுந்ததால் இந்த ப்ரோமோ வீடியோவை டெலிட் செய்து விட்டது.

இதையடுத்து, பாலாஜி முருகதாசுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் அதிகம் பரவி வருவதால் அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற நிறைவேற்றிக்கொள்ள திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தற்போது டிஆர்பி கிங்காக இருப்பவர் பாலாஜிதான் என்பதால் அவரை நிச்சயம் வெளியேற்ற மாட்டார்கள் எனவும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இறுதியில் இந்த வாரம் கமல் முன்னிலையில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *