பிரபல காமெடி நடிகர் சதிஷிற்கு குழந்தை பிறந்தாச்சி, மகிழ்ச்சியில் அவர் வெளியிட்ட பதிவு..

Cinema

தமிழில் பிரபல காமெடி நடிகர்கள் வரிசையில் நடிகர் சதீஷும் ஒருவர். இவர் 8 வருடங்களாக கிரேசி மோகனிடம் உதவியாளராக பணியாற்றியவர். மெரினா, மதராஸபட்டினம், எதிர் நீச்சல், மான் கராத்தே, இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த் போன்ற படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அகில சூப்பர்ஸ்டார் சிவா உடன் தமிழ் படம்2 படத்தில் வில்லனாக நடித்தவர் சதிஷ்.

சிக்ஸர் படத்தை இயக்கிய சாச்சியின் சகோதரி சிந்துவுடன் காமெடி நடிகர் சதீஷ்க்கு கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, ஜீவா, ராதாரவி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு சதீஷ் மற்றும் சிந்துவை வாழ்த்தி இருந்தனர்

மேலும் தற்போது இவர் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் அண்ணாத்த, இந்தியன் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்ற வருடம் இவருக்கும் சிந்து என்பவருக்கும் சென்னையில் திருமணம் ஆனது, மேலும் தற்போது இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக ட்விட்டரில் சதிஷ் பதிவிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *