ஒட்டும் இல்ல, உறவும் இல்ல… திட்டி விரட்டிய பீட்டர் பால்? காட்டுத் தீயாய் பரவும் தகவல்! மீண்டும் கொதித்தெழுந்த வனிதா

Cinema

வனிதா விஜயகுமாரும், பீட்டர் பாலும் காதலித்து லாக்டவுனன் நேரத்தில் திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்நிலையில் பீட்டர் பால் மீண்டும் குடிக்கு அடிமையாகிவிட்டதால் அவர்கள் பிரிந்துவிட்டனர். வனிதா பீட்டர் பாலை சந்தித்து சமரசம் பேச முயற்சி செய்தார் என்று தகவல் வெளியானது.சமாதானம் பேச வந்த வனிதாவை பீட்டர் பால் திட்டி, விரட்டிவிட்டார் என்று கூறப்பட்டது.இந்நிலையில் இது குறித்து வனிதா ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். பீட்டர் பால் விவகாரம் குறித்து வனிதா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, என் நலம் விரும்பிகள், மீடியா நண்பர்களுக்கு…நான் சமாதானம் பேசி அவருடன் மீண்டும் சேர முயன்று, நிராகரிக்கப்பட்டதாக சில ஆதாரமற்ற வதந்திகள் பரவி வருகின்றன. அது போன்று கற்பனை செய்வதை தவிர்க்கவும். என் வாழ்க்கையில் யாரும் என்னை நிராகரித்தது இல்லை. நான் தான் நிராகரிப்பது உண்டு

என் முந்தைய ரிலேஷன்ஷிப்கள் ஒர்க்அவுட் ஆக வேண்டும் என்று நான் முயன்று, பல நான்சென்ஸை சகித்துக் கொள்ள வேண்டியதாக இருந்தது. தாங்கவே முடியாத நிலைக்கு வந்த பிறகே வெளியேறியிருக்கிறேன். பொய்யான வாழ்க்கையை வாழ முடியாது. நான் அப்படி இல்லை. அதனால் தயவு செய்து உங்களின் கற்பனையை குறைத்துக் கொள்ளுங்கள்.

பிரேக்கப் குறித்து நான் வீடியோ வெளியிட்ட பிறகு நாங்கள் பேசினோம். அவர் தன் முடிவை எடுத்துவிட்டார். அதை என்னால் ஏற்க முடியாது. அவரின் மனைவியோ, பிள்ளைகளோ அவரை மீண்டும் ஏற்க விரும்பவில்லை. தற்போது உங்களுக்கு உண்மை தெரிந்திருக்கும். அப்பாவியாக இருந்ததால் நான் கு ற்றம் சுமத்தப்பட்டேன்.

நான் வேலையில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன். இது குறித்து மேலும் யூகிப்பது, விவாதிப்பது ஆகியவற்றை தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள். அவருடன் சட்ட ரீதியாகவோ, உணர்ச்சிப்பூர்வமாகவோ எந்த தொடர்பும் இல்லை. என் வலியை என் வழியில் டீல் செய்கிறேன். உங்களின் அன்பு மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி. தொடர்ந்து பாசிட்டிவாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *