பிக்பாஸ் வீட்டிற்குள் ஓவியாவா?.. ஆரவ் திருமணம் குறித்து அதிரடியான பதில்

Cinema

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து புகழின் உச்சத்திற்கே சென்றவர் தான் நடிகை ஓவியா.இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது ஆரவ்வை காதலித்தார். இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலால் தற்கொலை செல்லும் நிலைக்குச் சென்றார்.தற்போதும் ஓவியா ரசிகர்கள் மத்தியில் பெரும் தலைவியாக காணப்படுகின்றார். நீண்ட நாட்களுக்கு பின்பு ரசிகர்களிடம் பேசிய ஓவியா, அப்பொழுது ஆரவ் குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அவர் திருமணம் செய்ததைப் பார்த்தேன், மிகவும் மகிழ்ச்சி… அப்பொழுது தான் கேரளாவில் இருந்ததால் திருமணத்திற்கு வரவில்லை என்று கூறியுள்ளார்.

தனக்கும், ஆரவ்விற்கும் நடந்தது முடிந்துவிட்டது. திரும்ப திரும்ப அதைக் கேட்காதீங்க… இதற்கு மேல ஆரவ் பற்றி பேசுறது, எங்களது நட்பினைக்குறித்து கேட்பது எல்லாம் சரியில்லை தானே என்று தனது ரசிகர்களுக்கு கூறியுள்ளார்.பிக்பாஸில் சிறப்பு விருந்தினராக செல்வீர்களா என்று கேட்டதற்கு அழைத்தால் நிச்சயம் செல்வேன் என்று கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *