தாலி கழுத்திலேறும் நேரம். தான் இன்னொரு பையனை காதலிப்பதாகக் கூறி மணமகனை உதறிவிட்டு எழும் மணமகள். உதகை அருகே மப்பக்கண்டி. ..!!

தமிழகத்தில் தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் திருமணத்தை தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் மட்டகண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கும் பிரியதர்சினி என்ற பெண்ணிற்கும் எளிமையான முறையில் திருமணம் நடத்த பெற்றோர்கள் முடிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் அவர்களின் சம்பிரதாயப்படி, மணமேடையில் மணமகன், மணமகளிடம் தாலி கட்டுவதற்கு முன் திருமணம் செய்து கொள்ள சம்மதமா எனக் கேட்க வேண்டும். மணப்பெண் சம்மதம் என்று சொன்னவுடன் மட்டுமே மணமகன் தாலியை கட்ட முடியும்.

அதன்படி மணமகன் மணப்பெண்ணிடம் என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா? என இருமுறை கேட்கும்பொழுது மௌனமாக இருந்த மணப்பெண், மூன்றாவது முறை கேட்கும்போது எனக்கு சம்மதமில்லை எனக்கூறி திருமணத்தை தடுத்து நிறுத்தியது பரபரப்பை கிளப்பியது. இதனை தொடர்ந்து என்னை திருமணம் செய்து கொள்ள என் காதலன் வருகிறார். ஒரு மணி நேரம் பொறுங்கள். அவர் எனக்காக அவரது திருமண பந்தத்தை முறித்துக் கொண்டவர். அவரது குழந்தைகளை நான் தான் பார்த்துகொள்ள வேண்டும். உங்களை திருமணம் செய்து கொண்டால் அவருக்கு து ரோ க ம் செய்தது போல் ஆகிவிடும் எனக் கூறி அங்கிருந்து செல்ல முற்பட்டார்.

இதையெல்லாம் பார்த்த மாப்பிள்ளை அ தி ர் ச் சி யி ல் உறைந்தார், அப்போது அந்தப் பெண்ணின் பெற்றோர் அவரை கண்டித்து தாக்கினர். ஆனால் அச்சமின்றி அந்த மணப்பெண் மண மேடையில் இருந்து சென்றார்.
விசாரணையில் பணிபுரியும் இடத்தில் பார்த்திபன் என்பவரை பிரியதர்ஷினி காதலித்து வந்தது தெரியவந்தது.
இதுகுறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *