பிரிந்து சென்ற பீட்டர் பால்! கொந்தளித்த வனிதாவின் அதிரடி செயல்? காட்டுத் தீயாய் பரவும் பதிவு

பிக் பாஸ் வனிதாவை பற்றியே பேசி கொண்டு இருப்பவர்களுக்கு அவர் சமூவலைத்தளப்பக்கத்தில் அதிரடியாக கருத்து வெளியிட்டுள்ளார்.இந்நிலையில் வனிதா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, என் மீது அன்பும், அக்கறையும் வைத்திருக்கும் அனைவருக்கும்…என் வாழ்க்கையின் இன்ப, துன்பங்கள் குறித்து நான் உங்களுக்கு எப்பொழுதுமே அப்டேட் கொடுப்பேன். என் வாழ்க்கை பற்றி கணித்து, கிசுகிசுப்பவர்கள் தயவு செய்து உங்களின் வேலையை மட்டும் பார்க்கவும். ஒரு போலி பி.ஆர்.ஓ. அரைவேக்காடு செய்தியை பரப்புகிறார்.

தங்களுக்கு பிடித்தது போன்று வாழ அனைவருக்கும் உரிமை உண்டு. அவர்கள் தான் வாழணுமே தவிர வேறு யாரும் இல்லை. அதனால் என் வாழ்க்கையில் தலையை நுழைப்பதை விட்டுவிட்டு உங்கள் வாழ்க்கையை கவனிக்கவும். நான் தைரியமானவள், ஆசிர்விதிக்கப்பட்டவள், பலரின் அன்பும், ஆசியும் பெற்றவள். நான் எப்பொழுதும் நலமாக இருப்பேன். நன்றி என்று தெரிவித்துள்ளார்.

பீட்டர் பால் பிரிந்து சென்ற பிறகு வேதனையில் இருப்பதாக தெரிவித்த வனிதா தொடர்ந்து வேலையில் கவனம் செலுத்தி வருவது அவரின் ஆதரவாளர்களுக்கு ஆறுதலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *