30 வயது தாண்டிய பிரம்மாச்சாரி ஆணா நீங்கள்? இனியும் திருமணத்தை தள்ளிப்போடாதீர்கள்..எவ்வளவு பிரச்னை வரும் தெரியுமா?

Cinema

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்.மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா என வசீகரா திரைப்படத்தில் இளையதளபதி விஜய் பாடும் பாடலைப் போல சொந்த,பந்தங்களை அழைத்து திருமணத்தை சண்டை, சச்சரவுகள் இல்லாமலும், யாருக்கும் மனக்கசப்பு இல்லாமல் நடத்தி முடிப்பதும் பெரிய கலை தான். அதிலும் இப்போதெல்லாம் பலரும் தங்கள் திருமணத்தையே தள்ளிப்போட்டு செய்கின்றனர். 30வயதைக் கடந்து திருமணம் செய்யும் தம்பதிகள் எவ்வளவு பெரிய சிக்கலுக்குள் சிக்கும் வாய்ப்பிருக்கிறது என விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

என்ன பிரச்னை என்கிறீர்களா? வயதாக, வயதாக எப்படி பெண்களுக்கு கருவுறும் திறன் குறையுமோ, அதேபோல் ஆண்களுக்கும் குறையும் என்னும் அதிச்சி தகவல் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 40 பிளஸ் ஆகும் ஆண்களை திருமணம் செய்யும் பெண்கள், உரிய வயதில் திருமணம் செய்துகொள்ளும் பெண்களை விட ரொம்ப, ரொம்ப லேட்டாக கர்ப்பம் அடைகிறார்கள். முப்பதை தாண்டிய ஆண்களுக்கு ஆண்டுதோறும் டெஸ்டோஸ்டிரான் ஒரு சதவிகிதம் வரை குறையும்.

பொதுவாகவே டீன் ஏஜ் பருவத்தில் அதாவது 15 முதல் 10 வரை ஆண்களுக்கு விந்தணுக்களின் வளர்ச்சி ஆரம்பிக்கும். ஆண்கள் 22 முதல் 25 வயதுக்குள் நிரம்ப ஆண்மையுள்ளவர்களாக இருப்பார்கள். அவர்கள் அந்த வயதுக்குள் தங்கள் வீட்டுப்பொறுப்பையெல்லாம் முடித்து வேலைக்கும் போய் லைபில் செட்டில் ஆகியிருக்க மாட்டார்கள். அதனால் தான் 28 முதல் 30க்குள் திருமணம் செய்தே ஆகவேண்டும் என ஆண்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

30வயதுக்கு மேல் விந்துவின் இயக்கம் ஒருபக்கம் குறையத் துவங்க, இன்னொரு பக்கம் புகைபிடித்தல், சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளாதது, தூக்கமின்மை போன்றவையும் கருவுறுதலுக்கு வேட்டுவைக்கிறது. ஆக, 30க்குள் கெட்டுமேளம் கொட்டி, ஊர் அறிய திருமணம் செய்துவிடுங்கள் ஆண்களே!..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *