வாழ்க்கையை இழந்து கதறியழும் வனிதா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன்

Cinema

இயக்குனர் நடிகை என பல அவதாரங்களில் கலக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் எந்தவொரு சர்ச்சையாக இருந்தாலும் அதனை தில்லாக சந்தித்து வருகின்றார்.இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணத்தில், பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத்திற்கு ஆதரவாக இருந்து வந்தார்.அத்தருணத்தில் வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணனை எல்லைமீறி தகாத வார்த்தைகளால் பேசியதோடு, அக்காணொளி ஒட்டுமொத்த பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

அதன் பின்பு லட்சுமி ராமகிருஷ்ணன் இப்பிரச்சினையிலிருந்து விலகிவிட்டார். இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஹவுஸ் ஒனர் படத்திற்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ளது. இதனால் லட்சுமி ராமகிருஷ்ணன் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருப்பதோடு, அனைவருக்கும் நன்றியும் கூறியுள்ளார்.
தன்னை தகாத வார்த்தையில் பேசி அசிங்கப்படுத்திய வனிதாவை எந்த நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் பழிவாங்க நினைக்காமல் ஒதுங்கியதை தற்போதும் யாராலும் மறக்கமுடியாது

இந்நிலையில் வனிதா தனது மூன்றாவது கணவரான பீட்டர் பாலை பிரிந்து கண்ணீர் மல்க காணொளியினையும் வெளியிட்டிருந்தார். அந்த தருணத்தில் பீட்டர் பாலுக்கு ஆதரவாக பேசி பலரையும் எதிரியாக சம்பாதித்த வனிதா இன்று கண்ணீருடன் வாழ்க்கையை இழந்து காணப்படுவதோடு, ஆனால் அவரால் அவமானப்பட்ட லட்சுமி ராமகிருஷ்ணன் இன்று தனது படத்திற்கு அறிவிக்கப்பட்ட விருதினால் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் காணப்படுகின்றார். இதைத்தான் கர்மா என்பார்களோ? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *