பீட்டர் பாலை பிரிந்து வனிதா கதறியழுதது எதனால்?… உண்மையை உடைத்து சூர்யாதேவி போட்ட கடைசி காட்சி

Cinema

இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை ஆனால் நடந்துவிட்டது என்று பீட்டர் பாலை பிரிந்தது குறித்து வனிதா விஜயகுமார் தெரிவித்திருந்தார் வனிதா விஜயகுமாருக்கும், பீட்டர் பாலுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் பிரிந்துவிட்டதாக வெளியான தகவலுக்கு வனிதா சோகத்துடன் ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.இதுகுறித்து வனிதா கூறுகையில், காதலில் தோல்வி அடைவது எனக்கு பழக்கம் ஆகிவிட்டது. ஆனால் நான் எப்பொழுதுமே அதை தாண்டி வந்து தைரியமாக இருப்பேன்.ப காதலில் நம்பிக்கை வைத்து, ஏமாற்றம் அடைவது தான் மிகவும் வேதனையாகவும், தாங்க முடியாமலும் இருக்கிறது. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் உங்களுக்கு அது பெரிதாக தெரியாது.உங்கள் கண் முன்பு வாழ்க்கை பறிபோவது தான் மிகவும் வேதனையானது. அதை நான் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இது நடந்திருக்கக் கூடாது என்று நான் சொல்ல முடியாது. ஏனென்றால் வாழ்க்கை ஒரு பாடம். நான் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன். நான் தைரியமாக இருக்கிறேன்.போலி செய்திகளை படித்துவிட்டு நீங்களாக ஏதாவது பேச வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நான் எந்த தவறும் செய்யவில்லை

வனிதா தனது மூன்றாவது திருமணத்தின் மூலம் பல சர்ச்சைகளில் சிக்கிய நிலையில் தற்போது பீட்டர் பாலை பிரிந்துள்ளார். இந்த திருமணத்தின் போது பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத்திற்கு ஆதரவாக சூர்யா தேவி அவ்வப்போது வனிதாவை வறுத்தெடுத்து வந்தார்.

இவர்களின் பிரச்சினை காவல்நிலையம் வரை சென்றும், சூர்யா தேவி மீண்டும் காணொளி போடுவதை நிறுத்தாமல் வனிதாவை கண்டித்து வந்தார். பின்பு சற்று இவர்களின் பிரச்சினை அடங்கிய நிலையில், தற்போது மீண்டும் பூதாகரமாக எழுந்துள்ளது. வனிதா அவரது கணவரை பிரிந்தும் விடாத சூர்யா தேவி வனிதாவிற்கு கடைசியாக காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *