பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழையும் பிரபல பாடகி; குஷியில் ரசிகர்கள்

Cinema

அக்டோபர் 4-ம் தேதி தொடங்கிய பிக்பாஸ் – 4 சீசனில் முதல் எவிக்‌ஷன் நடந்து முடிந்திருக்கிறது.

பிக்பாஸ் சீசன் 4 விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. நாளொரு ச ண் டையும், பொழுதொரு புறணியுமாக போட்டியாளர்கள் பண்ணும் அலப்பறைகள் ட்ரெண்டிங்கில் இருக்கின்றன. ‘‘இதெல்லாம் ஸ்க்ரிப்டுங்க, வேற வேலையே இல்ல இவங்களுக்கு. என்று ஒரு கூட்டம் சொல்லி கொண்டு தான் இருக்கிறது

பிக்பாஸ் சீசன் 4 இரண்டு வாரங்களை கடந்து மிகவும் வி றுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.முதல் வாரம் எலிமினேஷன் இல்லை என்றாலும், இரண்டாம் வாரம் நடிகை ரேகா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில், ஏற்கனவே வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் தொகுப்பாளினி அர்ச்சனா நுழைந்திருந்தார்.

தற்போது, வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டிற்கு பிரபல பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டுக்குள் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பலரின் முகத்திரை கிழிந்துவரும் நிலையில், மேலும் சிலரை வீட்டிற்குள் இறக்கிவிட்டு நிகழ்ச்சியை மேலும் விறுவிறுப்பாக்க பிக்பாஸ் டீம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *