யார் இந்த பாடகர் வேல்முருகன் இவரின் மனைவி பிள்ளைகள் யார் தெரியுமா இவரின் சோகமான மறுபாகம்!!

Cinema

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில், பிரபல பாடகர் வேல்முருகனும் ஒருவர். இவரை பற்றிய சுவாரசியங்களை இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராகவும், நாட்டுப்புற பாடல்களாலும் பிரபலமானவர் வேல்முருகன். சென்னையை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2017 -ல் அழகான பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இவர், கிராமிய பாடகர், சினிமா பின்னணி பாடகர், மரபு இசை கலைஞர், நாட்டுப்புற நாயகன் என பல விருதுகள், பாடல் உருவாக்கத்தில் தோன்றிய முதல் பாடகர் , கின்னஸ் சாதனை படைப்பாளி, நடிகர் என பல்வேறு முகங்களை கொண்டவர்.

1980-ம் வருடம் மார்ச் 3 ல் விருதாச்சலத்தில் உள்ள “முதனை” கிராமத்தில், நடுத்தர இந்து பிராமண குடும்பத்தில் பிறந்தவர். இவரின் தந்தை விவசாய சார்ந்தவர்.இவர், தந்தையின் பெயர் தனசேகரன், மற்றும் அவரது தாயின் பெயர் அமிர்தம்பால்.பிக்பாஸ் வீட்டில் பேசியபோது, நோய்வாய்ப்பட்ட தனது தாய்க்கு சிகிச்சை அளிக்க தனது பெற்றோருக்கு போதுமான நிதி ஆதாரங்கள் இல்லை என்று அவர் பகிர்ந்தார்.உடல்நிலை சரியில்லாமல் இறந்த தாய்க்கு பின்னர், இரண்டு வருடங்கள் கழித்து, அவரது தந்தை காலமானார். வேல்முருகனுக்கு ஒரு மூத்த சகோதரர் பெரியசாமி உள்ளார்.

சிறிய வயதில் இருந்தே, இசை மற்றும் பாடல் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இவர் ஐடிஐ படித்த பின்பு இசையின் மீதிருந்த ஆர்வத்தால் அடையாறில் உள்ள இசைக்கல்லூரியில் சேர்ந்து பயின்றார்.
அதன் பின்னர், ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்த விநாடி வினா நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இப்படியாக இவருக்கான சினிமா வாய்ப்பு 2008 ல் சுப்பிரமணியபுரம் படத்தில் மதுர குலுங்க என்ற பாடலுக்கு பாட வாய்ப்பும் கிடைத்தது. பின்னர் நாடோடிகள் படத்தில், ஆடுங்கடா மச்சான் பாடலை பாடி பட்டி தொட்டி எங்கும் தெறிக்கவிட்டார்.

கடைசியாக இவர் அசுரன் படத்தில் “கத்தரி பூவழகி ” என்ற பாடலை 2019 ல் பாடியுள்ளார். இவர் இதுவரை 350 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.இவர், இந்திய ராணுவம் தொடர்பாக எழுதிய பாடலுக்கு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவரிடம் மரபு இசை நாயகன் விருது.டாக்டர் அப்துல் கலாம் மற்றும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் இருந்து நாட்டுப்புற நாயகன் விருது.

2020-ம் ஆண்டிற்கான பெரியார் விருது 2013ம் ஆண்டிற்கான தமிழக அரசின் கலைமாமணி விருது 2019ல் முதல்வர் பழனிசாமியால் வழங்கப்பட்டது.மேலும், விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், புஷ்பவனம் குப்புசாமியை தொடர்ந்து கலைமாமணி விருது பெறும் 3-வது கிராமிய பாடகரும் இவர் தான்.2020 பொங்கல் விழாவில், சென்னை போலீஸ் கமிஷனர் சார்பில் விருது போன்றவற்றை பெற்றுள்ளார். மேலும் இவருக்கு அமெரிக்கன் பல்கலைகழகம் உட்பட இரண்டு கவுரவ டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.

இதையடுத்து, ஒயிலாட்டக்குழுவினர் உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து பாடல் எழுதியேதோடு மட்டுமல்லாது 1418 நடனக்கலைஞர்களுடன் இணைந்து நடனத்தோடு, பாடியதை பாராட்டி 2019 ல் கின்னஸ் விருது வழங்கப்பட்டது.இவர் பல விருதுகளை பெற்றிருந்தாலும் இவர் அம்மாவை பற்றி எழுதிய பாடலுக்காக கிடைத்த கவுரவ டாக்டர் பட்டத்தையே பெருமையாக சொல்கிறார்.இறுதியாக, ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் அழைப்பு தான் இவரின் சினிமா வாழ்க்கையில் உச்சிக்கே செல்ல அடித்தளமாக அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *