பிள்ளையாரை அலேக்காக தூக்கும் வனிதாவின் அண்ணன்!வாவ்… வாய்பிளக்கும் ரசிகர்கள்

Cinema

பிரபல மூத்த நடிகரான விஜயகுமாரின் மகன் அருண் விஜய் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க பல ஆண்டுகளாக போராடி பல தோல்விகளை சந்தித்து இன்று வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். விடா முயற்சி, கடி ன உழைப்பு என பலரும் அசந்து போகும் வகையில் இன்று சினிமாவில் அனைவரும் விரும்பும் சிறந்த நடிகராக உயர்ந்து நிற்கும் அருண்விஜய் தொடர்ந்து வித்யாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து வெற்றிக்கு மேல் வெற்றி பெற்று வருவதோடு முன்னணி நடிகர்களுக்கு இணையாக வசூல் சாதனையும் புரிந்து வருகிறார்.

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பில் அசத்தி ரசிகர்களை தொடர்ந்து மகிழ்ச்சி படுத்தி வரும் அருண் விஜய் சில நாட்களுக்கு முன்பு முறுக்கு மீசையுடன் அசத்தலான கட்டுடல் என அனைவரும் மிரளும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த நிலையில் இப்பொழுது மேலும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தனது வீட்டிற்கு புதிதாக விநாயகர் சிலையை வாங்கி வந்த அருண் விஜய் அதை பாகுபலியை போல அலேக்காக தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் செல்லும் புகைப்படத்தை வெளியிட்டிருந்த நிலையில் அந்தப் புகைப்படம் இப்பொழுது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

இதேவேளை, பிக் பாஸ் புகழ் வனிதாவின் அண்ணன் என்பதும் குறிப்பிடத்தக்கது. ச ர் சை நாயகி வனிதா காதல் திருமணத்திற்கு பிறகு குடும்பத்தினை விட்டு பிரிந்த நிலையில் அவரை பற்றிய எந்த பேச்சுகளும் விஜயகுமாரின் குடும்பத்தில் யாரும் எடுப்பது கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *