சூர்யா ஜோதிகாவின் ரொமான்டிக் பாடலை பாடி அசத்திய சீரியல் நடிகை..!!! அகிலாண்டேஸ்வரி மருமகளுக்கு இவளோ திறமையா.

Cinema

ஜனனி அசோக்குமார் கோயமுத்தூர் பொண்ணு சமீபகாலமாக சீரியலில் கலக்கி வரும் ஒரு சீரியல் நடிகை. “நண்பேன்டா” என்ற படத்தில் நயன்தாராவிற்கு தோழியாக நடித்து இருந்தார். சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் விஜய் டிவியில் ஒளிபரப்பான மாப்பிள்ளை, மௌன ராகம் என்ற சீரியலில் நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து ஜீ தமிழில் இன்று வரை வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் “செம்பருத்தி” தொடரில் அகிலாண்டேஸ்வரியின் சின்ன மருமகளாக நடித்து அசத்தியுள்ளார்.

சீரியலில் நடித்துக் கொண்டு மேக்கப் டிப்ஸ் பற்றி அடிக்கடி ஏதாவது விடீயோக்களை இணையத்தில் வெளியிட்டு வந்தார். அதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததால் தனக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது டிப்ஸ் அல்லது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

தற்பொழுது சூர்யா ஜோதிகா ஜோடியாக நடித்து மாபெரும் வெற்றி பெற்ற காக்க காக்க என்ற படத்திலிருந்து ஒன்றா இரண்டா வார்த்தைகள் என்ற பாடலை பாடி அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *