பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த இரண்டு இளம் நடிகர்களா.? வெளியே கசிந்த தகவல்! அப்போ யாருக்குப்பா ஆர்மி வைப்பது.!

Cinema

பிக்பாஸ் சீசன் 4 தமிழ் எப்பொழுது என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். தெலுங்கில் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை, செப்டம்பர் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்கியது. இதனால் தெலுங்கு பிக் கோலாகலமாக ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்துள்ளனர்.ஆனால், தமிழில் எப்போது துவங்கும் என்ற எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.இதுவரை இரண்டு ப்ரோமோ வெளியான நிலையில் மூன்றாம் ப்ரோமோ இந்த வாரம் வெளியாகும் என்று ப்ரோமோ இப்படி ஒரு நிலையில் இந்த சீசனில் கலந்து கொண்டுள்ள சில போட்டியாளர்களின் லிஸ்ட் லீக் ஆகி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் பலரும் ஆவலாக காத்துகொண்டிருக்கின்றனர். அன்றாடம் எந்த போட்டியாளர்கள் கலந்துகொள்வார்கள் என இணையத்தில் வெளியாகி கொண்டிருக்கிறது.

இந்நிலையில், தற்போது மேலும் இரண்டு போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. பிரபல குணசித்திர நடிகர் எம்எஸ் பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக தெரிகிறது.

இவர் 96 படத்தில் இளம் விஜய்சேதுபதியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கடாரம் கொண்டான் திரைப்படத்தில் அக்ஷரா ஹாசன் ஜோடியாக நடித்த அபுஹாசன் என்பவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். இவர் பிரபல நடிகர் நாசரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த இருவரையும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேர்த்துக்கொள்ள கமல்ஹாசன் சிபாரிசு செய்ததாகவும் கூறப்படுகிறது.செப்டம்பர் 27 அல்லது அதாவது 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று போட்டியாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும், திங்கள் கிழமை முதல் பிக்பாஸ் வீட்டின் நிகழ்வுகள் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *