பிரபல குக் வித் கோமாளி நடிகருக்கு திடீர் திருமணம்! யார் மணப்பெண் தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படம்…. ஒரே குஷியில் ரசிகர்கள்

Cinema

குக்கு வித் கோமாளி என்பது விஜய் தொலைக்காட்சியில் 2019 நவம்பர் 16, முதல் 2020 பிப்ரவரி 23, வரை சனிக்கிழமை மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியை ரக்சன் மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகிய இருவரும் தொகுத்து வழங்க சமையல் கலை நிபுணர்களான செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷன் பட் ஆகியோர்கள் தலைவராக உள்ளார்கள்.இந்த சமையல் நிகழ்ச்சியில் பிரபலங்கள் சமையல் செய்ய, விஜய் தொலைக்காட்சியின் நகைச்சுவை நடிகர்களும் அவர்களுடன் பங்கு பெறுவார்கள்.

ஆனால் உதவியாக அல்ல, சில கோமாளித் தனங்கள் செய்து பார்வையாளர்களை சிரிக்க வைப்பதற்காக. இதற்கு நடுவில் தலைவர்கள் கொடுக்கப்படும் நேரத்தில் சமைக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியின் இறுதி அத்தியாயம் 2020 பிப்ரவரி 23 ஆம் ஆண்டு பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகி 14 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளர் வனிதா விஜயகுமார்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளரும், சீரியல் நடிகருமான சாய்சக்தி தற்போது திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.இவர் மும்பையை சேர்ந்த ஃபத்துல் ஃபாத்திமா என்பவரை தற்போது திருமணம் செய்துள்ளார்.இவர்கள் இருவரும் உறவினர்கள் என்று கூறப்படுகிறது.இந்த நிகழ்ச்சியில் சாய் சக்திக்கு நெருக்கமான குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கு கொண்டனர்.அவருக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *