பிஞ்சு விரல்களால் இறுக பிடித்த மைனா நந்தினியின் குழந்தை:முதன் முறையாக கியூட் புகைப்படத்தை வெளியிட்ட கணவர்! ஒரே குஷியில் ரசிகர்கள்

Cinema

நந்தினி சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்த மைனா என்ற கேரக்டர் மிகவும் பிரபலமானதால் அவர் மைனா நந்தினி என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். சின்ன தம்பி, அரண்மனைக்கிளி உள்ளிட்ட சீரியல்களில் நடித்த மைனா நந்தினி வம்சம், ரோமியோ ஜூலியட், காஞ்சனா 3 ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவர் சமீபத்தில் நடித்த நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.மைனா நந்தினி நடிகரும், நடன இயக்குனருமான யோகேஸ்வரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மைனா நந்தினி கர்ப்பமாக இருப்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட யோகேஸ்வரன் அதனைத் தொடர்ந்து அவர் வளகாப்பு புகைப்படங்களை பதிவிட்டார்.

இந்நிலையில் யோகேஸ்வரன் நந்தினிக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். யோகேஸ்வரன் – நந்தின் தம்பதிக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நடிகை மைனா நந்தினியின் கணவர் அவரின் குழந்தையின் கையின் புகைப்படத்தினை முதன் முறை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

மைனா மற்றும் யோகேஷ் தம்பதி முதல் குழந்தையை எதிர்நோக்கி இருந்த நிலையில் சமீபத்தில் மைனாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது.இப்படி ஒரு நிலையில் யோகேஸ்வரன் முதன் முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

 

View this post on Instagram

 

#kurumba #youaremyworld #kurumbaphoto #willuploadsoon @myna_nandhu

A post shared by yogi✌✌ (@yogeshwaram_official) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *