நீ தலித் !! உன்னோடு வாழ முடியாது !! காதல் மனைவியை கழட்டிவிட்ட ஐபிஎஸ் அதிகாரி !! ஒரே வருடத்தில் நடந்ததை பாருங்க !!

News

ஆந்திர மாநிலத்திலுள்ள கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வர ரெட்டி. ஹைதராபாத்திலுள்ள பிரபல உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் படித்து முடித்தார். படித்த காலத்தில் இவருக்கு, அதே பல்கலைக்கழகத்தை சேர்ந்த பிருதுலா பாவனா என்ற இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக 9 ஆண்டுகளுக்கு காதலித்து வந்தனர். பிருதுல்லா பாவணா தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், திருமணம் செய்துகொண்ட

பின்னர் தன்னுடைய வீட்டில் கூறிவிடலாம் என்று மகேஸ்வர ரெட்டியை பாவனாவிடம் கூறியுள்ளார். இதற்கு பாவனா சம்மதித்தவுடன் 2018-ஆம் ஆண்டில், ஏப்ரல் மாதத்தில் ரகசியமாக இருவரும் செகந்திராபாத்தில் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் தனிமையில் வாழ்ந்து வந்தனர்.பாவனா சில மாதங்களுக்கு பிறகு, தன்னுடைய குடும்பத்தாரிடம் நிகழ்ந்தவற்றை கூறியுள்ளார். ஆனால் மகேஸ்வர ரெடி தன் பெற்றோரிடம் திருமணத்தை கூறாமல் மறைத்து வந்துள்ளார். இதுகுறித்து கேட்கும்போதெல்லாம் ஏதோ கூறி அவர் சமாளித்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஐபிஎஸ் பரிட்சையில் தேர்ச்சி பெற்ற பிறகு மகேஸ்வர ரெட்டி, ரகசியமாக விவாகரத்து பெறுவதற்காக பாவனாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். மேலும் தன்னுடைய பெற்றோரின் சம்மதத்துடன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து பாவனா காவல்நிலையத்தில் புகார் அளிப்பதற்கு தயாரானார். நிலைமையை புரிந்து கொண்ட மகேஸ்வர ரெட்டி அவரை மீண்டும் வீட்டிற்கு அழைத்து சமாதானம் பேச முயற்சித்தார்.
நீ த லி த், உன்னை எங்கள் வீட்டில் ஏற்கமாட்டார்கள் என்று கூறியுள்ளார். அப்போதும் பாவனா ரகசிய விவாகரத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை. உடனடியாக மகேஸ்வர ரெட்டி அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து பாவனா அப்பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் திருமணத்தின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த செய்தியானது ஆந்திரா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *